இந்த தப்பை பண்ணாதீங்க.! மொபைலை “சார்ஜ்” போட்டால் அவ்வளவு தான்.. வங்கி கணக்கு ஜீரோ ஆகிடும்! வார்னிங்.
இந்த தப்பை பண்ணாதீங்க.! மொபைலை “சார்ஜ்” போட்டால் அவ்வளவு தான்.. வங்கி கணக்கு ஜீரோ ஆகிடும்! வார்னிங்.
28.07.2023
மொபைல் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், இப்போது புதிதாக ‘ஜூஸ் ஜாக்கிங்’ என்ற முறையைப் பயன்படுத்தி ஹேக்கிங் சம்பவங்கள் நடக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இப்போது நாம் எங்கே வெளியே சென்றாலும் நம்முடன் ஆறாவது விரலைப் போல வருவது என்னவோ மொபைல் தான். வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லக் கூட இந்த காலத்தில் மறப்பார்கள். ஆனால், மொபைலை எடுத்துச் செல்ல மறக்க மாட்டார்கள்.
அந்தளவுக்கு மொபைல் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதற்காகவே பல்வேறு இடங்களிலும் சார்ஜ் காலியானால் சார்ஜிங் போடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் எங்குச் சென்றாலும் மிக எளிமையாக சார்ஜ் போட்டுக் கொள்ள முடியும்
சார்ஜிங்: பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன் என எல்லா இடங்களிலும் இந்த சார்ஜிங் மையம் வந்துவிட்டது. வெளியே செல்லும் போது திடீரென சார்ஜ் காலியானால்.. நம்மிடம் கையில் பவர்பேங்கும் இல்லை என்றால் இதுபோன்ற சார்ஜிங் போர்ட்கள் தான் நம்மைக் காக்கும். இருப்பினும், தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் மாறி வரும் நிலையில், அனைத்தையுமே நாம் எச்சரிக்கையுடனே அணுக வேண்டி உள்ளது. இந்த சார்ஜிங் போர்ட்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் இந்த இடத்திலும் தகவல்களைத் திருட இவர்கள் ரெடியாக இருக்கிறார்கள். இதற்கு ஜூஸ் ஜேக்கிங் என்று பெயராம். இந்த ‘ஜூஸ் ஜாக்கிங்’ முறை மூலம் அவர்கள் பொது சார்ஜிங் போர்ட்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்கிறார்கள்.
ஸ்மார்ட்போன்கள்: இதன் மூலம் ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்து தகவல்களைத் திருடி அதை வைத்து பிளாக் மெயில் செய்கிறார்கள். இப்போது கடந்த சில காலமாகவே இந்த வகை ஹேக்கிங் தான் அதிகரித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஜூஸ் ஜாக்கிங் நிகழ்வு தான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பும் கூட எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது இடங்களில் அமைந்துள்ள சார்ஜிங் போர்ட்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை பொது சார்ஜிங் போர்ட்களை தவிர்க்குமாறு எஃப்.பி.ஐ கேட்டுக் கொண்டுள்ளது. வெளியே செல்லும் போது பொது சார்ஜிங் போர்டுகளுக்கு பதிலாக பவர் பேங்க்களை பயன்படுத்துமாறு எஃப்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது. இந்த ஜூஸ் ஜாக்கிங் என்றால் என்ன.. இதை எப்படி தகவல்களைத் திருடுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்..!
ஜூஸ் ஜாக்கிங் என்றால் என்ன: ஜூஸ் ஜாக்கிங் என்பது ஒரு வகையான சைபர் அட்டாக் ஆகும்.. இதில் மோசடி பேர்வழிகள் பொது இடங்களில் போலி சார்ஜிங் போர்ட்களை அமைக்கின்றனர். இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களில் இருக்கும் ஒயர்களை நாம் நமது ஸ்மார்ட்போனில் சொருகினால், அதில் இருந்து தகவல்களை ரகசியமாகத் திருடுவதற்கு ஏற்ப இதை வடிவமைத்திருப்பார்கள். இதை உண்மையான சார்ஜிங் நிலையம் என்று நினைத்து சார்ஜ் போடுபவர் தான் இவர்களின் இலக்கு. போலி சார்ஜிங் போர்ட்டில் ஹேக் செய்ய ரெடி செய்து வைக்கப்பட்டுள்ள அந்த ஒயரை சொருகினால், அந்த ஸ்மார்ட்போன் முழுக்க ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். பாஸ்வோர்ட், கிரெடிட் கார்டு விவரங்கள் என அத்தனை தகவல்களையும் நொடிகளில் எடுத்துவிடுவார்கள். சில நேரங்களில் வைரஸ்களையும் கூட உங்கள் மொபைலுக்கு அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அந்தளவுக்கு இதில் ஆபத்துகள் கொட்டி இருக்கிறது.
கண்டுபிடிப்பது எப்படி: அங்கே இருப்பது போலி சார்ஜிங் ஸ்டேஷனா இல்லை உண்மையான சார்ஜிங் ஸ்டேஷனா என்பதைக் கண்டறிவது கஷ்டம் தான்.. இருப்பினும், சில விஷயங்களைப் பின்பற்றினால் நாம் ஓரளவுக்குத் தப்பிக்கலாம். முதலில் முடிந்தவரை உங்களின் சார்ஜிங் கேபிளை கையோடு எடுத்து வரவும். அங்கு இருக்கும் கேபிளை பயன்படுத்த வேண்டாம். மொபைலில் சார்ஜ் நிற்காது என நினைத்தீர்கள் என்றால் கையோடு பவர் பேங்கை உடன் எடுத்துச் செல்லுங்கள். USB data blocker என்ற சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் டேட்டா திருட்டைத் தடுக்க முடியும். ஆட்டோமேடிக்காக எல்லா நெட்வோர்க்களிலும் கனெக்ட் ஆகும் ஆப்ஷனை ஆப் செய்து வைக்கவும் பொதுவெளியில் இருக்கும் Wi-Fi நெட்வோர்க்களில் கனெக்ட் செய்ய வேண்டாம். குறிப்பாக வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளை அதில் செய்ய வேண்டாம் உங்கள் மொபைலை அப்டேட் செய்து வைத்திருக்கவும். இதையெல்லாம் செய்தால் நமது மொபைலை ஓரளவுக்கு பாதுகாப்பாக வைக்கலாம்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்