ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் உள்ள P M பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்சி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் உள்ள P M பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்சி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
17.08.2023, ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் உள்ள P M பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்சி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக பள்ளி முதல்வர் அருளா வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் மோகன் பங்கேற்றார். மாடர்ன் கல்வி குழும துணைத் தலைவர் MKR சுரேஷ் அவர்கள் சிறப்புரையாற்றினார். விழாவில் கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரிய பெருமக்களும், பெற்றோர்களும், லயன்ஸ் நிர்வாக உறுப்பினர்களும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
Incredible India என்ற தலைப்பின் கீழ் அனைத்து மாநிலங்களின் உடை, கலாச்சாரம், உணவு பழக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் அனைவரும் ஒன்றே என்று சிறப்பிக்கும் வகையில் பங்கேற்றனர் என்பது சுதந்திர விழாவின் கூடுதல் சிறப்பாக கருதப்பட்டது. இதனைப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், துணை முதல்வர் கனிமொழி ஏற்பாடு செய்தனர். விழாவின் இறுதியாக ஐந்தாம் வகுப்பு மாணவி மகிழினி நன்றி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் செய்தியாளர் D வேல்முருகன்
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்