குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊதிய உயர்வு
ஜப்பானில் கொரோனாவுக்கு பின், குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளது. இந்நிலையில், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இளைஞர்களின் ஊதியத்தை உயர்த்த, ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில், அரசு நடத்திய கணக்கெடுப்பில், குறைந்த ஊதியம் பெறும் இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறவில்லை. இதனால், ஊதியத்தை உயர்த்தினால், குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என அரசு நம்புகிறது.