மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் உள்ள ஓட்டலில் 40 வயது மதிக்கத்தக்கவர் வேலை செய்து வந்தார். இவர் தனது மனைவி மற்றும் 15 வயது மகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தநிலையில், கடந்த சில மாதத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தனது மகளுடன் அந்த பெண் உறவினர் வீட்டுக்கு சென்று வசித்தார். சமீபத்தில் ஓட்டல் தொழிலாளி, மனைவி மற்றும் மகளை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர்கள் வர மறுத்தனர். அதுமட்டுமல்லாமல் அவர் மீது 15 வயது மகள் சிவகாசி மகளிர் போலீசில் ஒரு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு வீட்டில் நான் தூங்கிக்கொண்டு இருந்தேன். அப்போது என் தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து என் தாயிடம் கூறினேன். ஆனால் அப்போது போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால் நாங்கள் என் தந்தையிடம் இருந்து பிரிந்தோம். தற்போது அவருடன் ஒரே வீட்டில் வசித்தால் மீண்டும் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பார் என்று கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial