ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் மக்கள் நலன் மற்றும் மேம்பாட்டு திட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்
ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் மக்கள் நலன் மற்றும் மேம்பாட்டு திட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மக்கள் நலன் மற்றும் மேம்பாட்டு அவர்கள் திட்டங்கள் துவக்கி வைத்தார்
இதில் கச்சிப்பெருமாள் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 -2024 கீழ், இளமங்கலம் பொது கிணற்றிலிருந்து வடக்கு பக்கம் வரை ரூபாய் 8.00 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் அமைத்தல்,கல்லாத்தூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 -2024 கீழ், அகரத்தான்பட்டி காலனியில் ரூபாய் 9.50 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல்,தண்டலை ஊராட்சியில், PMAGY 2023 – 2024 திட்டத்தின் கீழ், ரூபாய் 19.71 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்தல், இறவாங்குடி ஊராட்சியில், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், சின்னகல்லேரி மயான பாதையை ரூபாய் 6.92 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல், அய்யப்பநாயக்கன்பேட்டை ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 -2024 கீழ், அய்யப்பநாயக்கன்பேட்டை ஆதிதிராவிடர் காலனியிலிருந்து மயானம் செல்லும் சாலை வரை ரூபாய் 3.60 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல், வெத்தியார்வெட்டு ஊராட்சியில்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 -2024 கீழ்,வெத்தியார்வெட்டு ஆதிதிராவிடர் காலனியில் ரூபாய் 9.40 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல்,
ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்.மேலும் இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேனா வழங்கி வாழ்த்துரை வழங்கினார்
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி (வட்டார ஊராட்சி), ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர், பொறியாளர்கள் குமார்,செல்வராணி,ஒன்றிய குழு உறுப்பினர்கள் தன.அருள்தாஸ், சத்யா இளையராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதிகா சங்கர்(கச்சிப்பெருமாள்), செந்தமிழ்ச்செல்வன் (கல்லாத்தூர்), ரேவதி ராஜீவ்காந்தி(தண்டலை), வளர்மதி பாலமுருகன்(இறவாங்குடி),கி.அறிவழகன்(அய்யப்பநாயக்கன்பேட்டை), இராமலிங்கம்(வெத்தியார்வெட்டு), பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் பூ.ரெ.கண்ணன், அவைத்தலைவர் குணசேகரன்,ஒன்றிய பொருளாளர் ஞானசேகரன், திருச்சி மண்டல தொழிற்சங்க செயலாளர் சேகர், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் கொண்டியார் (எ) செல்வராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து,மாவட்ட பிரதிநிதிகள் குணசேகரன், ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் மற்றும் அரசு அலுவலர்கள், கிளை கழக செயலாளர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டம் செய்தியாளர் வேல்முருகன்.