ஜெயங்கொண்டம் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
12.08.2023, ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக அரசின் தொழில் முனைவோர் புத்தாக்க நிறுவனம் சென்னை, அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி திருச்சி பள்ளி மண்டலம் சார்பில் தொழில் முனைவராக விரும்புபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரசின் திட்டத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது .கல்லூரி பேராசிரியர் ரேணுகாதேவி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரம்ஜான் பாத்திமா கனி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கருத்தரங்கத்தில் கள ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கலந்துகொண்டு தொழில் நிகழ்ச்சியின் முனைவோருக்கான தகுதி, மற்றும் அரசின் சலுகைகள்,திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியினை கல்லூரியின் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் வினிகோ சிறப்பாக ஏற்பாடு செய்தார்கல்லூரி ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்