மாணவர்களின்,கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் மாவட்ட அளவிலான பயிற்சி.
மாணவர்களின்,கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் மாவட்ட அளவிலான பயிற்சி.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
த.விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வரின் நான் முதல்வன் சிறப்புத்திட்டத்தின் படி மாணவர்களுக்கான கல்லூரி கனவு மாவட்ட அளவிலான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தலைமையேற்று பயிற்சியை தொடங்கி வைத்தார்கள். கல்லாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் .
உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவமணி ,ஆசிரியர் பயிற்றுனர்கள் அந்தோணி லூர்து சேவியர், சரவணன், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் பயிற்றுனர் ஐயப்பன் வரவேற்றார்.
கீழப்பழூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் எழில் வளவன், புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இப்பயிற்சியில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், துணைத்தலைவர்கள், கல்வியாளர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், அரியலூர் பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆக 100 பேர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா ,ஆசிரியர் பயிற்றுநர் மீரா தேவி ,ஆசைத்தம்பி ஆகியோர் கருத்தாளர்களாக திகழ்ந்து அரசுப்பள்ளி மாணவர்கள் மேல்நிலைக்கல்வி முடித்து உயர்கல்வி மருத்துவம், பொறியியல், வேளாண்மை, செவிலியர், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வழிமுறைகள், முன்னுரிமை திட்டங்கள், இலவச நேர்முக மற்றும் எழுத்துத்தேர்வு பயிற்சி மையங்கள் சார்ந்த பயிற்சிகளை வழங்கினர். ஆசிரிய பயிற்றுனர்கள் தாமோதரன், செந்தில்,டேவிட் ஆரோக்கியராஜ் ,சுகன்யா ஆகியோர் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். நிறைவாகஆசிரியர் பயிற்றுனர் குறிஞ்சிதேவி நன்றி கூறினார்.