பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
ராமநாதபுரம்: பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் வன்கொடுமை ஈடுபடுத்தியதாக ஐந்து பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா புத்துநகரில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை சிலர் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 5/2023 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன் விசாரணை செய்யும் பொருட்டு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு சிபிசிஐடி மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.