கடலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஒன்றிய அரசு நிலக்கரி சுரங்கம் அமைப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது
கடலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஒன்றிய அரசு நிலக்கரி சுரங்கம் அமைப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது
சிறப்புசெய்தியாளர்:
கடலூர் மாவட்டம்
வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,மேலிட பொறுப்பாளர் கட்சியின் மாநில செயலாளர் பொதினிவளவன் நோக்க உரை ஆற்றினார்,கடலூர் மாநகராட்சி துணைமேயர் மற்றும் கடலூர் நாடாளுமன்ற தொகுதிசெயலாளர் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் தொடக்க உரையாற்றினார்,கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் துரை. மருதமுத்து,கடலூர் தெற்குமாவட்ட செயலாளர் பாலஅறவாழி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்
செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்… வடலூர் நகர செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்,கூட்டத்தில் மாவட்ட பொருளாளர்கள் கெய்க்வாட் பாபு,கங்கை அமரன்… மாவட்ட துணை செயலாளர்கள் வழக்கறிஞர் இல.திருமேனி,வீரதிராவிடமணி,செல்வ.செல்வமணி,சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் குறிஞ்சிப்பாடி ஜெயக்குமார், காட்டுமன்னார்குடி மணவாளன்,விருத்தாசலம் அய்யாயிரம்,கடலூர் அறிவுடைநம்பி,சிதம்பரம் யாழ்திலிபன், நெய்வேலி அதியமான்,புவனகிரி சுதாகர் ,பண்ருட்டி பவர் ரமேஷ்,,ஒன்றிய நகர நிர்வாகிகள், செந்தில குரு,பாலமுருகுகள், சிவசக்தி,ஆற்றல் அரசு, வெங்கடசாமி, ஜோதிமணி, சிற்றரசு, காசி,
உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர முகாம் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன,
1. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கடலூரில் சனநாயகம் காப்போம் என்கிற தலைப்பில் மாபெரும் எழுச்சி பேரணி நடத்துவது,
2. வரும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஒன்றிய நகர செயற்குழு கூட்டங்கள் நடத்துவது
3. நெய்வேலி என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்க்கு ரூபாய் 25 லட்சம் தருவதை வரவேற்கத்தக்கது, மேலும்நிலம் இல்லாத தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்குவது,
4, பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஒன்றிய அரசு நிலக்கரி சுரங்கம் அமைப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது…
5.கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரியாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரியை தமிழக அரசு முழுமையாக சுகாதார துறையின் கீழ் முழுமையாக கொண்டு வர வேண்டும்,
6.விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் மீது போடப்பட்ட 110 ,வழக்குகளை உடனடியாக தமிழக அரசு நீக்க வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறை
வேற்றப்பட்டது.