“யானை பசிக்கு சோளப் பொறி” ஓ.பன்னீர்செல்வம் கேள்வி?
கடந்த 3 ஆண்டுகளில் 60 ஆயிரத்து 567 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது “யானை பசிக்கு சோளப் பொறி” என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. உண்மையிலேயே, தி.மு.க. அரசுக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற அக்கறை இருந்திருந்தால், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 70 ஆயிரம் பணியிடங்களையாவது நிரப்ப நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதை செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. தி.மு.க. அரசின் காலந்தாழ்த்தும் நடவடிக்கை காரணமாக, போட்டித்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதினை கடந்து, தேர்வே எழுத முடியாத நிலைமைக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் கிட்டத்தட்ட 50 சதவீத காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு துறையிலும், பதவி வாரியாக எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தையும், அந்த பணியிடங்கள் அனைத்தும் எப்போது நிரப்பப்படும் என்பதற்கான அட்டவணையையும் உடனடியாக வெளியிட வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.