கோவாக்ஸின் போட்டவர்களுக்கும் கொஞ்சம் பாதிப்பு
புதுடில்லி: கோவிட் தடுப்பு ஊசியான கோவாக்ஸின் போட்டவர்களுக்கும் கொஞ்சம் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனராஸ் ஹிந்து பல்கலை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 2022 ஜனவரி முதல் 2023 ஆகஸ்ட் வரையில் நடத்தப்பட்ட ஆய்வில் பலருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. நரம்பியலில் பாதிப்பு, தோல் நோய், மூட்டு இணைப்பு, சதைப்பிடிப்பு மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால மாற்றம் , குறைந்த அளவில் பக்கவாதம், பொதுவான சில பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவாக்ஸின் எடுத்து கொண்ட 30 சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.கோவிஷீல்டு போட்டவர்களுக்கு பாதிப்பு இருப்பது அந்நிறுவனமே ஒப்பு கொண்டதன் பேரில் இந்த மருந்து திரும்ப பெறப்பட்டது. தற்போது கோவாக்ஸின் பாதிப்பும் வெளியாகி இருக்கிறது. கோவாக்ஸின் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.