கடலூர் மாவட்டம்
வடலூர் சத்திய ஞானசபை வளாக முன்மண்டபத்தில், வடலூர் புனிதநகர ஆன்மநேய இயக்கம், சார்பில் மாதப்பூசத்தை முன்னிட்டு,போர் இல்லாத உலகம், புலை மற்றும் கொலை இல்லாத சமூகம், பசிகொடுமையற்ற மனிதநேயம் உள்ள உலகம், சாதி-மத-சமய இன பேதங்களற்ற சமரச சுத்த சன்மார்க்க உலகம் அமையவும்; அனைவரும் மெய்ப்பொருளை உணர்ந்து மரணமில்லாப் பெருவாழ்வு பெறவும் வேண்டியும் இப்பாராயணம் நடைபெற்றது
வள்ளலார் அவதரித்த மருதூர், அற்புதங்கள் புரிந்த கருங்குழி, உண்மை வழிபாட்டை உணர்த்திய வடலூர், இறைவனுடன் ஜோதியாகக் கலந்த மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் ஆகிய நான்கு புனித பகுதியில் எந்த ஒரு உயிரும் கொல்லப்பட்டு ரத்தம் சிந்தப்படாத ,புனித பூமியாகத் திகழ வேண்டும் என இறைவனிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை முன்வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சியில்,வள்ளலார் இறைவழிபாட்டிற்குப் பெருவெளி நிலம் வழங்கிய பார்வதிபுரம் கிராமத்தின் ராமகிருஷ்ணன் வடலூர் ஆசிரியர் சிவகுமார் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்கள். இப் பாராயணத்தில் பங்கேற்ற அன்பர்களுக்கு ராமகிருஷ்ணன் சுண்டலும், ஆசிரியர் சிவக்குமார் குடிநீர் பாட்டில்களும், மலேசியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி அம்மா வாழைப்பழங்களும் வழங்கிச் சிறப்பித்தனர்.
வடலூர் புனித நகர
ஆன்மநேய இயக்கப் பொறுப்பாளர்கள் நிகழ்வை முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
