சிமெண்ட் சாலை அமைக்கும் பணி; அமைச்சர் தொடங்கி வைத்தார்!
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளம் திருநெடுங்களநாதர் கோவிலுக்கு பக்தர்களும், சிவனடியார்களும் தினந்தோறும் அதிகளவில் வருகைப் புரிகின்றனர்.இக்கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக புதிய சாலை அமைக்குமாறு அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ.77 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான சிமெண்ட் சாலை அமைக்கும் பணியைத் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

