RC கோவிலாங்குப்பம் கிராமத்தில் புனித சவேரியார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விருதாச்சலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட RC கோவிலாங்குப்பம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது இங்கு வருடம் தோறும் மார்ச் மாதம் 12ஆம் தேதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற உள்ள திருவிழாவில் முதல் கட்டமாக கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது
புனித சவேரியார் உருவம் பதித்த கொடி ஊர் பொதுமக்களுடன் ஆலய வளாகத்தை சுற்றி எடுத்துவரப்பட்டது
பின்னர் வீரா ரெட்டி குப்பம் பங்குத்தந்தை
மைக்கேல் துரைராஜ் அவர்களால் ஆலய வளாகம் அருகே உள்ள கொடிமரத்தில் புனித சவேரியாரின் கொடி ஏற்றப்பட்டது
மேலும் வருகின்ற மார்ச் மாதம் 12ஆம் தேதி ஆடம்பர தேர் பவணியும் மறுநாள் கொடி இறக்க நிகழ்வும் நடைபெற உள்ளது இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.