ஈரானில் பெண்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா,
ஈரானில், பெண்கள் ஹிஜாப் அணிவதை கண்காணிக்க, பொது இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணியாமல் செல்லும் பெண்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஈரானில், 7 வயதை கடந்தாலே ஹிஜாப் அணிவது கட்டாயம். சமீபத்தில், நாடு முழுவதும் ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்நிலையில் ஹிஜாப் அணிவதை உறுதிசெய்ய பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது.