ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
- ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின மூன்று மணி நேரமாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்து தீயணைப்புத்துறையினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அரசு பல வருடங்களாக இயங்கி வருகிறது, வழக்கம்போல் பணி முடிந்தவுடன் வங்கியினை பூட்டிவிட்டு வங்கி அலுவலர்கள் சென்றுள்ளனர், இந்நிலையில் வங்கியின் உள்ளே அலாரம் ,அலறல் சத்தம் வருவதை வங்கியின் இரவு காவலர் சந்திரசேகரன் உள்ளே சென்றுவிட்டார். விட்டு எரிய தொடங்கியது உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அணைக்க மூன்று மணி நேரமாக போராடி தீயினை உள்ளே கொண்டு வந்து அதற்குள் அங்கிருந்த மர வகையிலான பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களான டேபிள் சேர் மின்னணு சாதனங்களான கம்ப்யூட்டர் யூபிஎஸ் மற்றும் ஏசி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துநாசமாயின இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது
இதில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தவுடன் வங்கியின் மேலாளர் நீரஜ் உள்ளே சென்று பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டாம், பாதுகாப்பு பெட்டகம் உள்ள பகுதியில் ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் வங்கியில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து வீணாகி விட்டன என்று தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்து பகுதியில் எழும் அசம்பாவிதம் ஏற்பட ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெகநாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.