“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில்” தலைமைச் செயலாளர் ஆய்வு!
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில்” தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அமைக்கப்பட்டு இருந்த சுத்திகரிப்பு குடிநீரை குடித்துப் பார்த்தார். இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தாம்பரம் காவல் ஆணையாளர் / கூடுதல் தலைமை இயக்குநர் அமல்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
