அரியலூர்-ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கரா தேவிக்கு 108 மூலிகைகளால் மகா சண்டி யாகம் நடைபெற்றது.
அரியலூர்-ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கரா தேவிக்கு 108 மூலிகைகளால் மகா சண்டி யாகம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம்.
இவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு 108 மூலிகைகளால் சண்டி ஹோமம் நடைபெற்றது.
யாகத்தில் பக்தகர்கள் வேண்டுதலில் பேரில் சேலைகள் இடப்பட்டன.
பின்னர் மஞ்சள் குங்குமம் திருநீறு வசம்பு வெற்றி வேலர், நன்னாரி வேர் உள்ளிட்ட 108 வகையிலான மூலிகைகள் முக்கனிகளான மா,பலா வாழை மற்றும் சப்போட்டா மாதுளை ஆப்பிள் உள்ளிட்டபழங்கள் யாகத்தில் போடப்பட்டன.
தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.
பின்னர் பிரத்தியங்கிரா தேவிமற்றும் சாமுண்டீஸ்வரி அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினர்.
இதில் சென்னை தஞ்சாவூர் கடலூர் திருச்சி கோவை பெரம்பலூர் மதுரை சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.