எந்த ஆடைக்கு “எந்த துப்பட்டா” அணியலாம்!
இந்திய பெண்கள் தின்சரி அணியும் ஆடைகளில் செல்வாரும் ஒன்று. இவற்றோடு சேர்த்து அணி யும் துப்பட்டாக்களை,பாவாடை சட்டை தொடங்கி மாடர்ன் ஆடைகள் வரை அவரவரின் ரசனைக்கு ஏற்றபடி பெண்கள் உபயோகிக்கிறார்கள். அந்த வகையில் அணியும் ஆடைகளுக்கு ஏற்றபடி துப்பட் டாக்களை தேர்ந்தெடுப்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். துணியின் ரகம்; நிறம், வேலைப்பாடு மற்றும் துப்பட்டாவை அணியும் விதம் என பல விஷயங்கள் இருப்பதே இதற்கு காரணமாகும்.குறிப்பாக காட்டன், பிரைடல், பிளைன்,நெட், டிசைனர், ஹெவி வெயிட், பாகிஸ்தானி, பஞ்சாபி, பிரிண்ட், புல்காரி, பந்தானி, சிப்பான், சில்க், மிரர் வொர்க், சூட், லெகங்கா, சிம்பிள், ஜரி, பனாரசி, எம் பிராய்டரி, பேன்சி, மல்டி கலர், செக்டு, ராஜஸ்தானி, ஹிஜாப் மற்றும் குர்த்தி போன்ற துப்பட்டா வகைகள் பெரும்பாலும் இளம் பெண்களால் விரும்பி உடுத்தப்படுகிறது. எனினும், சில ஆடைகளுக்கு, அவற்றுக்கு ஏற்ற துப்பட்டாவை சரியான அளவிலும், வடிவமைப்பிலும் உடுத்தினால் மட்டுமே கச்சிதமாக பொருந்தும். குறிப்பாக எந்த ஆடையாக இருந்தாலும் அவற்றின் வண்ணம், துணியின் ரகம் மற்றும் விடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே அதற்கான துப்பட்டாவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது பெரிய வேலைப்பாடுகள் இல்லாத ஆடைகளுக்கு ஹெவி டிசைனர், எம்பிராய்டரி, டிசைனர், ஜரி, கண்ணாடி அல்லது ராஜஸ்தானி வேலைப்பாடுகள் கொண்ட துப்பட்டாவையும், அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளுக்கு பிளைன், காட்டன், பேன்சி, மல்டி கலர், செக்டு, சிம்பிள், புல்காரி மற்றும் குர்த்தி வகை துப்பட்டாக்களையும் தேர்ந்தெடுத்து அணியலாம்.