தமிழகத்தில்50 க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி திடீர் சோதனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50 க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்துகின்றனர்.
கடலூர் மாநகாரட்சி அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்துகிறது.
திருவண்ணாமலை, நாகை, பொன்னேரி, தேனி, அரக்கோணம் ஆகிய இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-ல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொன்னேரி சார்பதிவாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று பொன்னேரி, தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
நாகை வட்டாச்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அலுவலகத்தின் அறையை பூட்டிய அதிகாரிகள், உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை
திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள, மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் சிறுபூலுவபட்டியிலுள்ள திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.