வேளாண்மை உழவர் நலத்துறை நாட்டுக்கோழி வளர்ப்பு அட்மா திட்ட பயிற்சி முகாம்
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கள்ளையங்குப்பம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.வேளாண்மை உதவி இயக்குனர் மலர்வண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை விரிவாக எடுத்துக் கூறினார். கால்நடை மருத்துவர் டாக்டர். நரேந்திரன் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை பராமரித்தல் தினசரி வருமானம் பெறுவது குறித்து விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.துணை வேளாண்மை அலுவலர் கரிகாலன், உதவி வேளாண்மை அலுவலர் அசோக் உயிர் உரங்கள் பயன்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார்கள். அட்மா திட்ட வட்டார மேலாளர் தியாகு நன்றி கூறினார். உதவி வட்டார மேலாளர்கள் கமலநாதன், கார்த்திகா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.