நம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம் திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது
நெய்வேலி ஏப்ரல் 19
கடலூர் மாவட்டம் மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமானடாக்டர் ,கொ. நந்தகோபாலகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் திட்டத்தின் கீழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.வேல்முருகன் அவர்களின் தலைமையில் மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் உஷா, ராஜேந்திரன், ஜெயரட்சகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளியின் SMC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நலச்சங்க மாநிலத் தலைவர் குமார் ஆகியோர்கள் உடன் இருந்தனர்