ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்தும் உணவுகள் குறித்து ஓர் பார்வை!
உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் மூலம் உசுரக்கப்படும் ரசாயன திரவங்களே ‘ஹார் மோன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை ரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு செல்கின்றன. உடல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், பாலியல் செயல்பாடு, இனப்பெருக்கம், மனநிலை போன்ற முக்கியமான செயல்பாடுகளுக்கு ஹார்மோன்கள் அடிப்படை காரண மாக அமைகின்றன.ஹார்மோன்கள் வழக்கமாக சுரக்கவேண்டிய அளவை விட அதிகமாகவோ அல்லது சுரந்தால் உடல் மற்றும் மன நிலையில் பல்வேறு எதிர்மறை யான மாற்றங்கள் ஏற்படும். ஹார்மோன் சுரப்பை சமநிலைப் படுத்துவதில் சிலவகை உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதைப் பற்றி இங்கே பார்ப்போம்… ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதற்கான முக்கிய காரணங் களில் ஒன்று மன அழுத்தம். ‘செரடோனின்’ என்னும் ஹார் மோன் சீராக சுரந்தால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி பெருகும். எனவே தான் இந்த ஹார்மோனை ‘ஹேப்பி- ஹார்மோன்’ என்றும் அழைக்கின்றனர். மாவுச் சத்துள்ள உணவுப்பொருட்களைச் சாப்பிடும்போது மூளையில் செரடோனின் சுரக்கும். மீன், உருளைக் கிழங்கு, பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பருப்பு வகைகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் செரடோனின் சுரப்பை சீராக்க முடியும்.ரத்தத்தில் ‘கார்டிசோல்’ என்ற ஹார்மோனின் அளவு அதிகரித்தால் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினை அதிகரிக்கும். இது ஆண்களின் உடலில் ‘டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோனின் அளவை குறைக்கக்கூடும். ‘டெஸ்டோஸ்டீரான்’ ஆண்களின் குரல், தாடி மற்றும் மீசை வளர்ச்சி, விந்தணுக்கள் உற்பத்தி போன்றவற்றுக்கு காரணமாக இருக்கிறது. ‘வைட்டமின் சி’ நிறைந்திருக்கும் எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா, குடைமிளகாய், பால், முட்டை போன்ற உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ‘கார்டிசோல்’ ‘ஹார் மோன் அளவைக் குறைக்க முடியும்.பெண்களின் உடலில் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படும்போது உடல் மற்றும் மன அளவில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்க்க ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுப்பொருட் களான முட்டைக்கோஸ்,புரக் கோலி, காலிபிளவர், முள்ளங்கி, கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார் மோனின் அளவை சமநிலைப் படுத்தும். இந்த உணவுப்பொருட் களில் உள்ள, கால்சியம் பெண் களுக்கு மாதவிடாய்க்கு முன்பாக ஏற்படும் வலியைக் குறைக்கும்.ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் இயல்பாகவே இன்சுலின் சுரப்பைத் தூண்டக் கூடியவை . தேங்காயில் நார்ச்சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். தினமும் தேங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.இதுதவிர ஆப்பிள், மாதுளை, செர்ரி பழம், கிரீன் டீ ஆகியவற்றில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந் துள்ளன. அனைத்து சத்துகளும் நிறைந்த சமச்சீர் உணவை தினமும் சாப்பிடுவதன் மூலம் ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்த முடியும்.