40 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை!
தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான அன்பே ஆருயிரே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிலா என்ற மீரா சோப்ரா. தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி, இசை, கில்லாடி உள்ளிட்ட படங் களில் நடித்துள்ளார். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு. இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் என்பது குதிரை கொம்பாகிபோனது.
இதையடுத்து தந்தையின் பிசினஸை கவனித்து வந்தார். இந்நிலையில், 40 வயதாகும் நடிகை நிலா, தனது திருமணம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மீரா சோப்ரா திருமணம் வரும் மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.