தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச மதிமுக குழு அமைப்பு!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படுகிறது. அதில் அவைத்தலைவர் அர்ஜூனராஜ், பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் அந்திரிதாஸ், தேர்தல் பணி செயலாளர் வி.சேஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன், கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன், தணிக்கைக்குழு உறுப்பினர் செந்தில்செல்வன், இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.