அரியலூர் M.R. பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கவிழா.
M.R. பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கவிழா.
18.08.2023,அரியலூர்
அரியலூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி முதல்வர் என். மதியழகன் வரவேற்புரையாற்றினார் இயக்குனர் டாக்டர் ஆர் இராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்
விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர். இரகுநாதன் தலைமையேற்று உரையாற்றும் போது ஒவ்வொரு மாணவரும் தினசரி நடப்பதை எழுதும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
நேர மேலாண்மையை கடைபிடியுங்கள்.
நேரத்தை சேமியுங்கள்.
பல தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், வெற்றியாளர்கள் அதிகாலை எழுந்தவர்கள் தான்
ஒரு நாள் ஆறு மணி நேரம் உறக்கம் போதும்.
நிறைய புத்தகங்கள் படியுங்கள்
உங்களை நீங்கள் ஒரு ஆய்வாளராக கருதி ஆராய்ச்சி செய்யுங்கள்.
குறிப்பெடுக்கப் பழகுங்கள்
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியையும் விளையாட்டையும் பின்பற்றுங்கள்.
சிரிப்பு ஒரு அருமருந்து. சிரிக்கப்பழகுங்கள். மன அழுத்தம் நீங்க யோகா, தியானம், உடற்பயிற்சி செய்யுங்கள்.
ஆசிரியர்கள் மாணவர்களின் கண்களை பார்த்து பாடம் நடத்தவேண்டும். மாணவர்கள் ஆசிரியரின் முகத்தை பார்த்து கேட்கவேண்டும்.
மாணவர்களுக்கு சமூக அக்கறை அவசியம் ,தேசப்பற்றும் , நாட்டுப்பற்றும் வேண்டும்.
NSS,YRC, RRC போன்ற மாணவர் அமைப்புகளில் மாணவர்கள் பங்கெடுக்க வேண்டும்.
இன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம். காற்றை விலை கொடுத்து வாங்கும் நிலை வராமலிருக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நடுவோம்.
கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
ஒவ்வொரு மாணவரும் தங்கள் வாழ்நாளில் குறைந்தது 100 மரங்களையாவது நட்டு பராமரிக்கவேண்டும். மரங்களை நடுவதால் தான் மழை பெற முடியும்.
சாதி மதங்கள் வேறுபாடுகள் அற்ற ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும்.
சமய நல்லிணக்கத்திற்கு நாம் முன்மாதிரியாக திகழ வேண்டும்.
பெண்களை மதித்து நடத்த வேண்டும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கக்கூடாது .
எப்போதும் சிறப்பாக படியுங்கள். கல்வி தான் நம்மை முன்னேற்றும்.
பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரி பருவத்தில் கால் வைக்கும் இந்த வயதில் பைக் , விலை உயர்ந்த செல்போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவை உங்களை நல்வழிப்படுத்துவதில் இருந்து தவறான வழிக்கு எளிதில் திசை திருப்பும்.
தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.
மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள்
படிப்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
பல கலைகளில் திறமையை வளர்த்துக்கொள்க
தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படுங்கள்
எழுதுகின்ற பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள் நல்ல நண்பர்கள் உங்கள் வாழ்க்கை முன்னோக்கி செல்ல உதவியாக இருப்பார்கள்.
தனிமனித ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்
மனக்கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம்.
மனக்கட்டுப்பாட்டோடு வாழ பழகிக் கொள்ளுங்கள்.
நல்ல நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்
தேர்வு நோக்கில் திறம்பட படித்து தேர்வு நன்றாக எழுதி வெற்றி பெறவும்
பல மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள்
உங்களது நோக்கம் மிகப்பெரியதாக இருக்க வேண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ,ரயில்வே, பாரஸ்ட் சர்வீஸ் என்று உயர்ந்த பட்ச வேலை வாய்ப்புகளை நோக்கி நீங்கள் முன்னேற வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து கல்வி நிறுவனங்களின் இயக்குனர் முனைவர் ஆர் ராஜமாணிக்கம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நிர்வாக இயக்குனர் முனைவர் க.செந்தில்குமரன் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் பேராசிரியர்களும் மாணவ, மாணவியர்கர்களும் பங்கு பெற்றனர்.
அரியலூர் மாவட்டம் செய்தியாளர்D. வேல்முருகன்
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்