ஜெயங்கொண்டத்தில் மாபெரும் இலவச பொது நல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்.
ஜெயங்கொண்டத்தில் மாபெரும் இலவச பொது நல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்.
ஜெயங்கொண்டத்தில் ஓஎன்ஜிசி காவேரி அசட் காரைக்கால் சிஎஸ்ஆர் நிதி உதவியுடன் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது நல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஓஎன்ஜிசி காவேரி அசட் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியின் மூலமாக ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் இணைந்து நடத்தும் இலவச பொது நல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் ஓஎன்ஜிசி யின் பொது மேலாளர் ஜோசப் ராஜ் தலைமையில் நடைபெற்றது .
இதில் சிஎஸ்ஆர் அமைப்பின் தலைவர் சிவசங்கர் வரவேற்புரையாற்றினார்.
ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக பொறுப்புணர்வு திட்ட பொறுப்பாளர் விஜய் கண்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார் மருத்துவ பொறுப்பாளர் கணேஷ்குமார், ஸ்டார் என்.ஜி.ஓ அருமைராஜ் சிறப்புரை ஆற்றினார்
கண் பரிசோதனை செய்து தேவைப்படும் பயனாளிகளுக்கு கண்ணாடியும் நடக்க சிரமப்படும் பெரியவர்களுக்கு கைத்தடி ஊன்றுகோலும் முகாமில் ரத்த பரிசோதனை ரத்த அழுத்தம் இசிஜி பொது மருத்துவம் போன்றவையும் பரிசோதிக்கப்படது இந்த முகாமில் ஓஎன்ஜிசி மருத்துவர் அன்பரசு செவிலியர் நாச்சியார் சி எஸ் ஆர் கமிட்டியின் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வு ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணர்வு திட்ட நிதியின் மூலமாக இந்த முகாம் நடைபெற்றது
இந்த முகாமில் சுமார் 200க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர் 150 க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கண்ணாடி வழங்கியும் 20 நபர்களுக்கு கைத்தடி வழங்கப்பட்டது
முகாமில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட சுற்றுப்புற கிராம முதியோர்கள், தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, முறையாக கண் பரிசோதனை மற்றும் உடம்பில் உள்ள பொது நல மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டனர். ஸ்டார் நிறுவனத்தின் மேலாண்மை அறங்காவலர் டாக்டர் எம். அருமைராஜ், மருத்துவர் சேவை குழு ஓ.என்.ஜி.சி. பொறுப்பாளர் டாக்டர் எம். கணேஷ்குமார்,
சி.எஸ்.ஆர் (பொறுப்பு) முதன்மை மேலாளர் ஜெ. விஜயகண்ணன், ஆகியோர்கள் முகாமில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். எல்டர் பார் எல்டர் பவுண்டேஷன் செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்ட வெளி நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார் இம் முகாமின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நிகழ்ச்சியிணை ஒருங்கிணைத்து வழி நடத்தினார் மருத்துவ முகாமின் நிறைவில் எல்டர் பார் எல்டர் பவுண்டேஷன் இயக்குனர் இளங்கோ ராஜரத்தினம் நன்றி கூறி, முகாமினை நிறைவு செய்தார்.