அரியலூர் – 1986- 87 கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சியான கலகலப்பான சந்திப்பால் மகிழ்ச்சி
அரியலூர் – 1986- 87 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சியான சந்திப்பால் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986 – 87 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் தங்கள் பணியாற்றும் வேலை பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் மேலும் தங்கள் பள்ளி பருவத்தில் நடைபெற்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளையும், அப்போது கலந்து கொண்ட பல்வேறு போட்டிகள் குறித்து பசுமையான,பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் கலகலப்பாக
நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத சக முன்னாள் மாணவர்கள் குறித்தும் ,ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொண்டது பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தது இதில் சென்னை, காரைக்கால், கோவை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியும் மற்றும் தொழில் செய்து வரும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்கள்.
இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும், மகிழ்வையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.