விருத்தாசலம் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனை தொடக்க விழா
விருத்தாசலம் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனை தொடக்க விழா
விருத்தாசலம் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனை தொடக்கம் – 100-க்கும் மேற்பட்ட நுகர்வோர் பங்கேற்று பயன்பெற்றனர்இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், நஞ்சில்லா காய்கறிகள், பழங்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலும், தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகளில் இயற்கை வேளாண் விளைபொருட்களை வாரந்தோறும் சந்தைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பினை தமிழகவேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், ர. வினோத்,வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டார்கள்.இதனைத்தொடர்ந்து, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை அங்காடிகள் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவினை செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன்குடி முருகன்மற்றும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பேங்க் ஆஃப் பரோடா வங்கி மேலாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாயிகள் தாங்கள் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.இயற்கை விவசாயி மாதவன்,இயற்கை வேளாண் பொருட்களின் சிறப்புகள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். மேலும், இயற்கை விவசாயிகளான கவியரசன், கணேசன் மற்றும் கார்த்திகேயன், பாக்யராஜ், கனகசபை, சிவராமதாஸ், சிவராமன் ஆகியோர் இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் அவற்றின் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.மேலும், உழவர் சந்தையின் செயல்பாடுகள், விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு உழவர் சந்தை மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து வேளாண்மை அலுவலர்கோபாலகிருஷ்ணன் விளக்கினார்.இந்நிகழ்ச்சியில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்புத் துறையின் வேளாண்மை அலுவலர் மகேஷ் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவர்கள் ஒருங்கிணைத்தனர்.இயற்கை வேளாண் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட நுகர்வோர் கலந்து கொண்டு, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்பெற்றனர்.