துளாரங்குறிச்சி கிராமத்தில் கிராமசபை கூட்டம் துணை சுகாதார மையம் அமைக்க இடம் தேர்வு
உடையார் பாளையம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைகூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைர் ராஜேஸ்வரி. ஐய்யபன்,ஊராட்சி செயலாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக த.சோழங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவயோகிதா. கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். துணை ஆரம்ப சுகாதார மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது, கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையினை கிரமசபை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறபட்டது. அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு எடுக்க உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிராம சுகாதர செவிலியர், ஆய்வாளர் சுகதார கலந்து கொண்டனர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.