சி ஈ ஓ சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு சுமார் 226 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கியதாக தகவல்.
கூகுள் சி ஈ ஓ சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு சுமார் 226 மில்லியன் டாலர் மதிப்பிலான சம்பளத்தை வாங்கியதாக நிறுவனம் நேற்று (ஏப்.21 ) தெரிவித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.1800 கோடியாகும்.
இது கூகுள் நிறுவனத்தில் மத்திய வரிசை ஊழியர்களின் சம்பளத்தைவிட 800 மடங்கு அதிகமாகும்.
இதுதான் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
செலவுக் குறைப்பு என்று கூறி பல்லாயிரம் ஊழியர்களை வெளியேற்றப்படும் சூழலில் ஒரு தனிநபரின் சம்பளம் இவ்வளவு அதிகமாக இருக்கிறதே என்று கண்டனக் குரல்கள் கிளம்பி உள்ளன.