Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

Keezhadi
அரசியல்

“கீழடி அறிக்கை வெளியிடப்பட்டால்தான் விமர்சனம் சாத்தியம்” : அமர்நாத் ராமகிருஷ்ணா

By tamilnewsmedia0
August 24, 2026 1 Min Read
0

“கீழடி அறிக்கை வெளியிடப்பட்டால்தான் விமர்சனம் சாத்தியம்” : அமர்நாத் ராமகிருஷ்ணா

தஞ்சாவூர், ஆக. 23—தஞ்சாவூர் திலகர் திடலில்மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழாவில் கலந்துகொண்ட இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குநர் (கிரேட்டர் நொய்டா), கீழடி அகழாய்வு அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடப் பட்டால்தான் அது குறித்த விமர்சனங்களும் சாத்தியமாகும் எனச் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். “அகழாய்வுப் பணி முடிந்தபின் அறிக்கையை உரிய முறையில் சமர்ப்பித்துவிட்டேன்; அதைவெளியிட்டால் மக்களுக்குபயன்படும், பல ஆய்வு களுக்கு வழி திறக்கும். கண்டு பிடிக்கப்பட்ட செய்திகளை ஆவணப்படுத்தியே அறிக்கைதயாராகிறது; எனவே அதைத் திருத்த வாய்ப்பில்லை” என்றார்.

வரலாற்றை மாற்றும் ஆதாரங்கள்தமிழகத்திலிருந்து நாகரிகம் தோன்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், இரண்டாம் கட்ட நகர நாகரிகம் கங்கைச் சமவெளிக்கு முன்பேதமிழகத்தில் தோன்றியதாக வும், இரும்பைக் கண்டு பிடித்தவன் தமிழன் என்ற செய்தி உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் அவர் கூறி னார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கீழடி தொடர் பாக டி.என்.ஏ. ஆய்வு மேற்கொண்டுள்ளதைச் சுட்டிக் காட்டி, அறிவியல் ஆய்வுகள் பெருகும்போதே உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும்என்றார்.

காவிரிப் படுகையில் அகழாய்வு தேவைசோழர்கள் குறித்து இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை எனவும், மாளிகைமேட்டில் மட்டுமே அகழாய்வு நடந்துள்ள நிலையில் காவிரிப் படுகையில் ஆழமான அகழாய்வுகள் நடத்தினால் வரலாற்றுத்தொன்மையை வெளிக்கொணர முடியும் எனவும் அவர் தெரிவித்தார். விழாவின் ஆய்வரங்கில் சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் வெ. மாரப்பன், தமிழக மக்கள் முன்னணிமாநில ஒருங்கிணைப்பாளர் பொழிலன், “புதிய குரல்” நிறுவனர் ஓவியா, தமுஎகச மாநிலப் பொதுச் செயலர் களப்பிரன், இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் பேசினர். தப்பாட்டம், நையாண்டி, தெருக்கூத்து உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Tags:

kezhaditamilnewsmedia
Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

சென்னையில் குறளகத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற தூய்மை பணியாளர்கள் குண்டுகட்டாக கைது

Next

‘அம்பிகாபதி’எனும் அமர காவியம்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme