எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.
இதில் கழக அமைப்பு செயலாளர் மருதராஜ், நத்தம் ஒன்றிய தலைவர் ஆர்.வி. என் கண்ணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்எல்ஏக்கள் பிரேம்குமார், பழனிச்சாமி, நடராஜன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் உட்பட மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.