Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

Blog

By tamilnewsmedia0
August 14, 2026 2 Min Read
0
                          வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  ரூ.11.48 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

வ
கடலூர் மாவட்டத்தில்
தமிழகவீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் , முன்னிலையில் மாநகராட்சி, சமூக நீதித்துறை, பள்ளி கல்வித்துறை, சுகாதாரத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறைகளின் மூலம் பல்வேறு பகுதிகளில் ரூ.11.48 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
தமிழகவீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் திட்டங்களை செயல்படுத்திடவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தினை ஏற்படுத்திடும் வகையில் விளையாட்டு மைதானங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைத்திடும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவ மனைகளின் நவீன தொழில்நுட்பத்துடன் உட்கட்டமைப்பை மேம்படுத்திடவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பல்வேறு துறைகளில் வாயிலாக நடைபெற்று வரும் திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்து விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தி உள்ளார்.
அதன் அடிப்படையில் கடலூர் மஞ்சக்குப்பம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குளத்தினை என்.எல்.சி சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.27.50லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி புணரமைப்பு செய்யப்பட்டதையும், குண்டுசாலை, மருதாடு ஆகிய பகுதிகளில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதியில் மாநில நிதியின் கீழ் தலா ரூ.47.88லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் அறையினையும், ஒறையூர் ஆரம்பசுகாதார நிலையத்தில் 15வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின் கீழ் ரூ.78.20லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், ஒறையூர் ஊராட்சியில் ரூ.45.லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், ஒறையூர் பலாப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பிரதான் மந்திரி கனிஜ் க்ஷேத்ரா கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து பி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம், மாளிகைமேடு ஊராட்சியில் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், ஒறையூர், கீரப்பாளையம், நடுவீரப்பட்டு, எறும்பூர், ராமநத்தம், வேப்பூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.203.57 லட்சம் மதிப்பீட்டிலும் பல்நோக்கு விளையாட்டு மையம், திருவாமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.76.45 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடம், சூரக்குப்பம், பூங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.35.லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம், நடுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.70 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடம், வேகாக்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம், வேகாக்கொல்லை ஊராட்சியில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் ஆகியபணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மேலும், சி.என்.பாளையத்தில் ரூ.30.லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், கீழ்க்குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.74.22 லட்சம் மதிப்பீட்டிலும் 3 கூடுதல் வகுப்பறை கட்டடம், வெங்கடாம்பேட்டை ஊராட்சியில் 15வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் ரூ.150.லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்பசுகாதார நிலையம், தீர்தனகிரி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் மாநில நிதிக்குழு மான்யம் திட்டத்தி கீழ் ரூ.44.90லட்சம் மதிப்பீடில் கிராம ஊராட்சி செயலக கட்டடம், என்.எல்.சி சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கொத்தட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, சாக்கான்குடி அரசு உயர்நிலைப் பள்ளி, நல்லூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி,, மருங்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பாதிரிபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கருங்குழி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாமியார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருகண்டடேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ரூ.94.92 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டீம் லேப் (STEM Lab ) ஆகிய பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளையும் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைசெல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிஷன்குமார், ஊராகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை கட்டிடம் சிவசங்கரநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், செயற்பொறியளார் சமூக நீதித்துறை அன்புசாந்தி, பொதுமேலாளர் லோகநாதன், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

Next

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது ஏராளமான பக்தர்கள் மக்கள் வழிபட்டனர் வடலூர், ஆக. 23: வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படுகின்ற வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூரில் உலகப் புகழ் பெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தை நிறுவினார். இங்கு சத்திய தருமச்சாலை,சத்திய ஞான சபை உள்ளது.மேலும் கருங்குழி கிராமத்தில் வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த இல்லம், மேட்டுக்குப்பம் கிராமத்தில் சித்திவளாக திரு மாளிகை ஆகியவை அமைந்துள்ளது. வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் சத்திய ஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி மாத ஜோதி தரிசனமும் ஆண்டுதோறும் தை மாத பூச நட்சத்திரத்தன்று ஏழுதிரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஜோதி தரிசன பெருவிழாவை காண்பதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் காண கூடுவர். இந்நிலையில் வள்ளலார் நிறுவிய தர்ம சாலையில் அணையா அடுப்பு மூலம் மூன்று வேளையும் வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சத்திய ஞான சபையில் நிறுவப்பட்டிருந்த கொடிமரம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பழைய கொடிமரம் பழுதடைந்ததைத் தொடர்ந்து புதிய கொடிமரத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பார்வதிபுரம் கிராம மக்களால் சுமார் ₹25 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 8 மாதங்களாகப் புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இன்று காலை சத்திய ஞான சபையில் அகவல் பாராயாணம் பாடப்பட்டு 8 மணி அளவில் 39 அடி உயரமுள்ள புதிய கொடிமரத்தினை பார்வதிபுரம் கிராம மக்களால் முறைப்படி நிறுவப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான வள்ளலார் பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற முழக்கத்துடன் புதிய கொடிமரத்தை நிறுவினர். மேலும் தொடர்ந்து புதிய கொடிமரத்தில் பீடம் மற்றும் செப்புத்தகடுகள் பதித்த பின்பு வள்ளலார் அவதரித்த நன்னாளும் மாதப்பூச நாளுமாகிய 05.10.2026 (புரட்டாசி – 18) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் பார்வதிபுரம் அம்மன் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசையோடு ஊர்வலமாக வந்து சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வதிபுரம் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme