கனமழை, புயலாக மாறி தமிழகத்தை மிரட்டும்,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் “ஃபெங்கல்” புயலாக மாறும்.அதிகனமழை பெய்ய வாய்ப்பு,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, கல்லூரி,தேர்வுகள் ஒத்திவைப்பு
தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி:
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (27.11.2024)ஃபெங்கல் புயலாக மாறும்.
புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை.
அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.
கனமழையால் விடுமுறை:
இன்று (27/11/2024) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
1.கடலூர்
2.மயிலாடுதுறை
3.நாகப்பட்டினம்
4.தஞ்சாவூர்
5.திருவாரூர்
6.திருவள்ளூர்
7.விழுப்புரம்
“பள்ளிகளுக்கு ” மட்டும் விடுமுறை:
1.சென்னை
2.செங்கல்பட்டு
3.காஞ்சிபுரம்
4.புதுக்கோட்டை
“புதுச்சேரி” மாநிலம்:
1.புதுச்சேரி
2.காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை,
“பல்கலைக்கழகம் ” மற்றும் பிற ,
” திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் இன்று நடைபெறுவதாக இருந்த இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.
“சிதம்பரம் ” அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு; தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,
“மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
கனமழை எதிரொலி: நாளை (27.11.2024) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – புதுச்சேரி அரசு.