விழுப்புரம் அருகே, மேல் செவலாம்பாடியில் புறநோயாளிகள் பிரிவு கட்டடங்கள்!அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறப்பு.
“விழுப்புரம் சிறப்பு செய்தியாளர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை ஊராட்சியில் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக புறநோயாளிகள் பிரிவு கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்
ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வளத்தி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றுபேசினார்
நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தினை திறந்து வைத்து ரத்த அழுத்தம் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இல்லம் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தனையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் வழங்கி ,பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டுமென அவர் கூறினார்,