வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது. பூஜைகளை திப்பிராஜபுரம் சுரேஷ் சிவாச்சாரியார் செய்து வைத்தார். பின்னர் கலசங்கள் புறப்பாடு நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து மகாமாரியம்மன் மற்றும் மூலவர் களுக்கு அபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் அனைவருக்கும் அருட் பிரசாதமும், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ஆய்வர் அ. ரமணி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன், முன்னாள் தலைமை அர்ச்சகர் இரா. செல்வம் பூசாரியார், ஆலய அர்ச்சகர் இரா. சங்கரன் பூசாரியார், உபயதாரர்கள் மற்றும் வரதராஜப் பேட்டை தெரு வாசிகள் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திராளாக கலந்து கொண்டனர்.