வடலூர் கன்னித்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொங்கும் பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்
வடலூர் கன்னித்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொங்கும் பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்
திக்திக் என செல்லும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும் இலகுரக வாகனங்களும் பேருந்துகளும்
அந்த இடத்தில் பேருந்தில் பயணிக்கும் போது இதயத்தில் இடி விழும் அளவிற்கு அதிர்வலைகள் ஏற்படுத்தும் மிகவும் பழமை வாய்ந்த பாலம்
உடனடியாக மாற்றுப் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்
இந்த வழியாக தினசரி பயணிக்கும் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் அவர்களும் மாவட்ட நிர்வாகமும் மாற்றுப்பாதை அமைத்து தர முன் வருவார்களா????
*குறிஞ்சிப்பாடி தாலுக்கா வடலூர் கன்னி தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த குறுகிய பாலம் தற்போது தொங்கும் பாலமாகவும் பாலவத்தின் இருபுறமும் தடுப்பு கட்டை இல்லாமலும் சாலை நடுவே குண்டும் குழியுமாகவும் காட்சியளித்து வருகின்றது இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான கனரக இலரக பேருந்து வாகனங்களும் இந்த பழமை வாய்ந்த பாலவத்தின் வழியாக திக் திக் என சென்று வருகிறது. இது மிகவும் குறுகிய பாலம் என்பதால் பல தடவை பல வாகனங்கள் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த தேசிய நெடுஞ்சாலையை சில வருடங்களாக ஆமை வேகத்தில் சுறுசுறுப்புடன் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது அனைவரும் அறிந்ததே தற்போது விரிவாக்க பணி முடிவடைய இன்னும் சில வருடங்கள் கூட ஆகலாம் அதற்குள் இந்த தொங்கும் பாலத்தில் கனரக இலகுரக பேருந்துகள் கவிழ்ந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் நமது கடலூர் மாவட்ட மாண்புமிகு இரு அமைச்சர்களும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக காலம் தாழ்த்தாமல் மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?