*போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்*
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். போச்சம்பள்ளி சுற்று வட்டார சுமார் 20 கி.மீ. சுற்றளவுக்கு உள்ள கிராமங்களில் இருந்து நோயாளிகள் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையையே நாடுகின்றனர். இந்த போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனை அருகே அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி, பெண்கள் மேல்நிலைபள்ளி, நூலகம், தொட்க்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,பத்திர பதிவு அலுவகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் பள்ளிக்கூடங்களும் இயங்கி வருகின்றன. இந்த அரசு பொது மருத்துவனைக்கு செல்லும் தார் சாலை முழுவதுமாக பெயர்ந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் இவ்வழியில் செல்வதால் மிகவும் அவதிப்படுகின்றனர். 108 வாகன ஊர்தி, ஆட்டோ ஆகியவை செல்வது சிரமமாக உள்ளது. உடனடியாக அரசு பெண்கள் மேல் நிலைபள்ளியிலிருந்து, தருமபுரி-திருப்பத்தூர் சாலை வரை 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தெரிவிக்கையில் இன்னும் ஒரு மாதத்தில் ஒப்பந்தம் விட்டு புதிய தார்சாலை அமைப்பதாக தெரிவித்தார்.