பிளாஸ்டிக் மேளங்களின் விற்பனையால்,வீழ்ச்சியடைந்து வரும் போகி மேளம் விற்பனை”,
செங்கல்பட்டுமாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அருந்ததிபுரம் பகுதியில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக அருந்ததியர் இன மக்கள் போகி மேளம் தயார் செய்து வருகின்றனர்.
அவர்களின் குலத் தொழிலாக கருதப்பட்டு வரும் செருப்பு தைத்தல் போன்ற தொழில்களில் தற்போது ஈடுபடுவதில்லை எனவும் அரசு சார்பில் தங்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலமாக வழங்கப்படும் தோல் பசை உதிரி பாகங்கள் கூட தற்பொழுது விற்பனைக்கு கிடைக்கவில்லை எனவும் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்தனர்.
தை திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முன்பாக போகி தினத்தில் விற்கப்படும் தோற்பசையின் மூலமாக செய்யப்பட்ட மேலத்தை தற்பொழுது செய்து வருகின்றனர்.
சுமார் 30 முதல் 40 குடும்பங்கள் 15 ஆயிரத்திற்கும் மேலாக போகி மேளங்களை தயார் செய்து விற்பனை செய்த நிலையில் தற்போது அப்பகுதியில் மூவர் மட்டுமே மேலம் தயாரிப்பதாக தெரிவித்தனர் அப்படியே தயார் செய்தாலும்
குறைந்த வியாபாரிகளே தங்களிடம் வந்து போகி மேளங்களை பெற்று சென்று விற்பனை செய்து வருகிறார்கள் என்றும் தற்போது தயாராகியுள்ள போகி மேலங்களை வாங்குவதற்கு போதிய அளவில் வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்தனர் இதற்கு காரணம் பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்ட மேலங்களை தயாரித்து விற்பனைக்கு வருவதே எங்களுக்கு பெரும் பாதிப்பு என தெரிவித்தனர் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அரசு முனைப்பு காட்டினாலும் அதை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர், தமிழக அரசு அருந்ததியர் இன மக்களை கவனத்தில் கொண்டு எங்களின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.