பாஜகவினருக்கு அறிவியல் பூர்வமாக சிந்திக்க தெரியாது டிஆர் பாலு அதிரடிே பேச்சு

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் மதுரை யில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு (திமுக) பேசியதாவது: வரலாற்றுச் சிறப்பு மிக்க சேது சமுத்திரத் திட்டப் பணிகள் 2.7.2005 அன்று மதுரை பாண்டி கோவில் அருகே நடைபெற்ற விழாவில் அன் றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கி வைக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு அம்சங்களைக் கருத் தில் கொண்டு சேதுசமுத்திரத்திட்டம் மிகவும் அவசியமான திட்டம் எனக் கூறினார் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

நான் (டி.பாலு) மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது சேது சமுத்திரத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு களைக் கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளக் கூறி கப்பல்துறை அமைச்சகத்தை அணுகிய போது அந்தக் கூட்டத்திலேயே சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்பட்டது.

சேதுக் கால்வாய் வழியாக பெரிய கப்பல்கள் செல்ல முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படு கிறது. அது உண்மையல்ல. இந்தியாவிலுள்ள பெரிய துறைமுகங்கள் அனைத்திற்கும் வந்து செல்லும் கப்பல்களில் 80 சதவீதத் கப்பல்கள் சேதுக் கால்வாய் வழியாகச் செல்லமுடியும்.

தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கான ஆயி ரக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாக வும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங் கக் கூடிய இந்தத் திட்டத்தை ஒரு சாரார் எப்படி யாவது முடக்கிவிட வேண்டும் என்று முனைந்து மதத்தை துணைக்கு அழைத்துக் கொண்டனர்.

இந்தியாவில் சாதியும், மதமும் வலிமையான ஆயுதங்கள் என்பதால் இதை எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர். சேதுசமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை உடைக்காதீர்கள் என்கின்றனர். இராமர் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந் தார் என்கின்றனர். ஆனால் இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனித இனம் தோன்றியதாக அறிவியல் கூறுகிறது

மதசாயம் பூசாதீர்கள்: https://youtu.be/j9dQZIJdaOk

சேது சமுத்திரக் கால்வாயின் மொத்த நீளம் 167 கி.மீ. இதில் 89 கி.மீ., அளவிற்கு மட்டுமே தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டியி ருந்தது. எஞ்சிய பகுதியில் போதுமான ஆழம் இருப்பதால் அகழ்வாய்வுப் பணி மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. 12 மீட்டர் ஆழம் 300 மீட்டர் அகலம் கொண்ட இந்தக் கால்வாயில் இருவழிக் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக கப்பல் பாதை வடிவமைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை பா.ஜ.க. அமைச்சர்கள் தான் கொண்டு வந்தனர். அதற்கான கப்பல் பாதையையும் அவர்கள் தான் தீர்மானித்தனர். இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் சத்ருகன் சின்ஹா அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சங்கரலிங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 2001-ஆம் ஆண்டு மே மாதம் அதிமுக தனது பொதுத்தேர்தல் அறிக்கையில் இராமேஸ்வரத்தில் தடையாக உள்ள மணல் மேடுகளை அகற்றி சேதுக்கால்வாய் அமைக்க வேண்டுமென்று கூறியுள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கையிலும் சேதுசமுத்திரத் திட்டம் வலி யுறுத்தப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு சேதுத் திட்டம் குறித்த நீரி யின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை கப்பல் துறை அமைச்சர் வேத்பிரகாஷ் கோயலிடம் வழங்கப்பட்டது. 23.10.2002 அன்று கப்பல்துறை இணையமைச்சர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நீரியின் அறிக்கை விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருநாவுக்கரசர் “சுற்றுச்சூழல், இயற்கை சூழலியல் நோக்கிலிருந்து தனுஷ்கோடி தீவிற்கு அப்பால் கண்டறியப்பட்டுள்ள கப்பல் பாதை தான் சிறந்த தேர்வு எனத் தெரிவதாகக் கூறியிருந்தார்.

சேதுத்திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து தமிழகத்தின் ஆறு கடலோர மாவட் டங்களில் 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2005-ஆம் ஆண்டு பிப்ரவரி கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டது. 31.3.2005 அன்று சுற்றுச்சூழல், வன அமைச்சகம் திட் டத்தை தீவிரமாக பரிசீலித்து அனுமதியளித்தது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் சேதுசமுத்திரத் திட்டத்தின் நிலை குறித்தும், கால்வாய் பாதை சர்ச்சை கள் குறித்தும் 2007-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்

அதற்கு பதிலளித்த நான், “மன்னார் வளைகுடா வையும் வங்காளவிரிகுடா கடலையும் இணைத்து ஒரு கப்பல் கால்வாய் உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பாதை இந்தியாவின் கடல் எல்லைக்கு உட்பட்ட நீர்பரப்பில் அமைய வேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கம். இதனால் 424 கடல் மைல்கள், அதாவது பயணத்தில்30 மணி நேரம் குறையும். இருகரைகளுக்கும் இடையில் கடல்வழி உருவாவதால் இந்தத் திட்டம் தேசியப் பாதுகாப்பில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றேன்

இதையடுத்து 29.10.2009 அன்று 9-10 மீட்டர் ஆழத்திற்கு மிகாமல் கப்பல் பாதையை உருவாக்கி, சேது சமுத்திரத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டதுடன் கப்பல்துறைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட் டது. இதைத் தொடர்ந்து பொறுப்பிற்கு வந்த பாஜகவைச் சேர்ந்த கப்பல்துறை அமைச்சர் சத்ருகன்சின்ஹா சேதுக்கால்வாய் பாதை பாம்பன்பாலத்தின் கிழக்கே ஆதம் பாலத்தின் வழியாக அமையுமென்றார்.

உமாபாரதியின் ஆசையும்-உண்மையும்

ஆதம்பால கடல் பகுதி ஐந்து முதல் ஏழு லட்சம் ஆண்டுகள் பழமையானவை என புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இப்பகுதியில் ஏற்பட்ட கால நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய பாஜக-அமைச்சரவையில் ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி கேட்டுக்கொண்டார். இவரது நோக்கம் நிலப்பகுதி எப்படி உருவானது என்பதைக் கண்டறிவது தான்.

இந்த ஆய்வு 2002-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2003-ஆம் ஆண்டு மார்ச் வரை நடைபெற்றது. 205 மீட்டர் ஆழம் வரை 80 இடங்களில் ஆழ்துளைக் கிணறு கள் தோண்டப்பட்டது. ஆய்வில், இறுகிய களி மண், சுண்ணாம்புப் பொருளால் உருவான மணல் கற்கள், தாவரங்கள்-விலங்கினங்களால் உருவான சுண்ணாம்புக்கல் இருப்பது தெரிய வந்தது. கடலின் ஏற்ற இறக்கங்களால் கற்கள், சுண்ணாம்புக் கல் இவை படிந்திருக்கலாம். ஆழ்துளை கிணறுகள் தோண்டிய பகுதிகள் ஐந்து லட்சம் முதல் ஏழு லட்சம் ஆண்டுகளுக்கு இடையிலான கால கட்டத்தில் உருவானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சேதுத்திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் சந்நியாசிகள் கலந்து கொண்ட னர். அவர்களுக்கு உண்மை நிலை தெளி வாக்கப்பட்டது. அவர்களும் ஒப்புக்கொண்டார் கள். கூட்டம் முடிந்து சென்றவர்கள் தங்களது நிலைபாட்டை இராமனின் பெயரைக் கூறி மாற்றிக்கொண்டார்கள். அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு பாது காப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் எழுதிய கடிதத்தில் நாட்டின் பாதுகாப்பிற்காக சேதுத்திட்டம் நிறைவேறவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் சின்னம் இல்லை

இந்தப் பகுதியில் தொன்மை வாய்ந்த கட்ட மைப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே இதுவரை இந்தத் திட்டம் அமைந்துள்ள இடத்தையோ அதன் பகுதிகளையோ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னம் என்று அறிவிக்கவில்லை. அறிவிப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கவில்லை. ஒரு வேளை 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்ததாகக் கூறப்படும் இந்த இடத்தில் பாஜ கவோ, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவோ ஏன் எந்த பூஜைகளையும் நடத்த வில்லை.

அல்லது பாலத்தை இடிக்காதீர்கள் என இராமராவது எங்களிடம் கூறியிருக்க வேண்டும். அவரும் கூறவில்லை. சுப்பிரமணியன்சுவாமி ஆதம்பாலத்தை புராதனப்பகுதியாக அறிவிக்க வேண்டுமென்கிறார். மொத்தமுள்ள 32 கி.மீட்டரில் 16 கி.மீ,. மட்டுமே இந்தியாவுடையது, 16 கி.மீ இலங்கையுடை யது. புராதனச்சின்னம் என எப்படி நீதிமன்றம் அறிவிக்க முடியும். வரலாற்றாசிரியர் ரெமிலா தாப்பரும் கூட எதிர்ப்பாளர்கள் கூறுவது போல் அங்கு எதுவும் இல்லை எனக் கூறிவிட்டார்.

ஆனால், பாஜக-வினர் அறிவியல்ப் பூர்வ மாக சிந்திக்க மறுத்து திட்டத்தையே குழி தோண்டி புதைத்து விட்டனர். நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமும் நீதி மன்றமும் நமக்குத் துணையாக உள்ளது. ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்த இந்தத் திட்டத்தை எந்தவொரு முதல்வரோ, பிரதமரோ தடுத்து நிறுத்த முடியாது. 2024-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின் சேது திட்டம் நிறை வேறும் என்றார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial