தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை ஆன்லைன் வழியாக இணைப்பதில் சிக்கல்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை ஆன்லைன் வழியாக இணைப்பதில் சிக்கல்கள் உள்ளன.
ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சார கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
அதனால் மின் சந்தாதாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.
ஆனால்,எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து மக்களிடம் விளக்கி,விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதிய அவகாசம் கொடுக்காமல் திணிக்கக் கூடாது.
இதற்கு குறைந்தது 2மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
அதற்குள்ளாக மின் பயன்பாடு குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்ய செல்லும் போது,பயனாளிகளின் ஆதார் அட்டையை பெற்று அங்கேயே இணைத்து கொடுக்க நடவடிக்கை வேண்டும்- பாமக தலைவர் அன்புமணி.