தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தாக்கல்
ஆன்லைன் தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ஆன்லைன் ரம்மியால் தமிழ்நாட்டில் 41 பேர் மரணம்
நாளுக்கு நாள் மரணங்கள் நம் கண் முன்னே நடக்கிறது
தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் உரை.
மாநிலத்தில் உள்ள மக்களை காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் அரசுக்கு உரிமை உண்டு.
இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது.
மனித உயிர்களை பழிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒடுக்குவதில், இதயம் உள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது, இருக்கக்கூடாது.
ஆன்லைன் ரம்மிக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து 10,735 மின்னஞ்சல்கள் பெறப்பட்டன.
ஆன்லைன் ரம்மி: கனத்த இதயத்துடன் சட்டமன்றத்தில் நிற்கிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும்- முதலமைச்சர் ஸ்டாலின்.