வடலூரில் என் எல்சிக்கு நிலம் கையக, படுத்துவது ஆலோசனை கூட்டத்திற்கு, விவசாயிகளை அனுமதிக்காததால்,விவசாயிகள் சாலைமறியல், பதட்டம் போலிஸ் குவிப்பு, கூட்டத்தில் இருந்து2எம் எல்ஏக்கள் வெளிபேறினார்கள்

கடலூர், மாவட்டம்
வடலூரில் சென்னை சாலையில்உள்ள தனியார் திருமண மண்டபத்தில் என் எல் சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கையகப்படுத்துவது குறித்த அமைச்சர்கள், அதிகாரிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள்ஆலோசனைக்கூட்டம் ஏராளமான போலிஸ் குவிக்கப்பட்ட நிலையில், தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட கலெக்டர் பாலசுப்பரமணியன், மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு, சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலை
வகித்தார்கள், கூட்டத்தில்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சபா ராஜேந்திரன், வேல்முருகன், கடலூர் ஐயப்பன்,அருள்மொழி தேவன், சிந்தனைச்செல்வன்,
முன்னாள் எம்எல்ஏ துரை கி சரவணன், என்எல்சி நிர்வாக இயக்குனர்சதீஷ் பாபு,நில எடுப்பு துறை என் எல்சிஅதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள்,
அனைத்து கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பாதிக்கப்பட்ட கிராம
விவசாயிகள் யாரும் அழைக்கப்படவில்லை, என்பதால் பண்ருட்டி எம்எல்ஏ.வேல்முருகன்
கூட்டத்தினை புறக்கணித்துவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது, இதேபோன்று கூட்டத்தில் கலந்துகொண்ட, புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், அருள்மொழிதேவன், என் எல்சி, நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்த விவசாயிகள் யாரையும், கூப்பிடாமல் கூட்ட நடத்துவதால், கூட்டத்தினை புறக்கணிப்பதுடன், வீடு, நிலம் கொடுத்து பாதித்த விவசாய குடும்பத்தில், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலையும், ஏக்கர், ஒன்றுக்கு௹ ஒரு கோடி நிவாரணமும், வழங்க வேண்டும், என்ற கோரிக்கையினை பதிவு செய்துவிட்டு கூட்டத்தினை விட்டு வெளியேறினார், ஏராளமான போலிஸ் குவிக்கப்பட்டு,
பதட்டமான சூழலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு
பத்திரிகையாளர்கள் யாரையும் கூட்ட அரங்கினுள்
அனுமதிக்கப்படவில்லை, இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை,
*இந்த நிலையில், நில எடுப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் நெய்வேலி அருகே உள்ள கத்தாழை கருவேட்டி கீழ வளையமாதேவி மேல் பழையமாதேவி கங்கைகொண்டான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டகிராம மக்களையாரையும், இக்கூட்டத்தில் அனுமதிக்கப்படாததால், தங்களை அழைத்து கலந்த ஆலோசிக்கவில்லை, எனக்கூறி வடலூரில் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்தின் அருகில், வடலூர் பண்ருட்டி சென்னை சாலையில் வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள், காலை” 11 மணி அளவில்
சாலை மறியலில் ஈடுபட்டனர்,
அங்கு குவிக்கப்பட்டிருந்த போலிசார் சாலைமறிலில் ஈடுபட்டவர்களுடன், சமதானம் பேசி, கலைந்துபோகவைத்தனர்,
இதனால் அரை மணி நேரம் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் வழியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

6 thoughts on “வடலூரில் என் எல்சிக்கு நிலம் கையக, படுத்துவது ஆலோசனை கூட்டத்திற்கு, விவசாயிகளை அனுமதிக்காததால்,விவசாயிகள் சாலைமறியல், பதட்டம் போலிஸ் குவிப்பு, கூட்டத்தில் இருந்து2எம் எல்ஏக்கள் வெளிபேறினார்கள்

  • 59d50fdd0579146b55f3df4ac3ab6209
    January 7, 2023 at 3:10 AM
    Permalink

    சிறப்பு

    Reply
  • 4a5bc07e92a5d8f6a59fdfa6bd25b781
    January 7, 2023 at 3:12 AM
    Permalink

    மக்களின் தலைவன் அண்ணன் தி வேல்முருகன்
    விவசாயிகளின் பாதுகாவலன்

    Reply
  • 8baa5ecb4099906619d921677ea86b67
    January 7, 2023 at 3:21 AM
    Permalink

    வேல்முருகன் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் போராளி தலைவன்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial