சிதம்பரம் புவனகிரி காட்டுமன்னார்ககோவில் ஆகிய தொகுதிகளை மிகவும் பின்தங்கிய பேரிடர் பகுதியாக தமிழக அரசு அறிவித்திட வேண்டும்.கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேண்டுகோள்
சிதம்பரம் புவனகிரி காட்டுமன்னார்ககோவில் ஆகிய தொகுதிகளை மிகவும் பின்தங்கிய பேரிடர் பகுதியாக தமிழக அரசு அறிவித்திட வேண்டும்.
காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம் காட்டுமன்னார்குடி புவனகிரி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளிடங்கிய குட்கிரமங்களையும், நகராட்சி பேரூராட்சிகளையும் கொண்ட தாழ்வான பகுதி ஆகும். இதனால் இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தால் உடனடியாக வடிவதற்கு வழி இல்லை,
அதேபோல் கடைமடை பகுதியான எங்கள் பகுதியில் கனமழை பெய்தால், விவசாயம் செய்த நெல் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களும் நீரில் மூழ்கி நாசமாகி விடுகிறது. வெயில் காலங்களிலும் நீர் ஆதாரம் இல்லாமல் காய்ந்து நாசமாகி விடுகிறது.இதற்கு சரியான தீர்வினை கடலூர் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் முன்னெடுக்க வேண்டும். கொள்ளிட கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
அதேபோல் சிதம்பரம் நகராட்சியில் சுகாதார சீர்கேட்டால் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது. குறிப்பாக மந்தக்கரை குப்பைமேடு பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் சூழ்ந்துகொள்வதாலும் நகராட்சி கழிவுகளாலும்,
இந்த குப்பைமேடு மலைபோல் காட்சியளிக்கிறது. இந்த குப்பைமேடு பன்றிகளின் கூடாரமாக மாறி வருவதால், இந்த பகுதி மக்களுக்கு டெங்கு மலேரியா போன்ற பெரும் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.
இந்த குப்பைமேட்டை அகற்றிடுமாறு கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சிதம்பரம் நகராட்சியும் கடலூர் மாவட்ட நிர்வாகமும்,
தமிழக அரசும் மக்களை பாதுகாத்திட இந்த குப்பை மேட்டை உடனடியாக அகற்றிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும்.
இந்த மூன்று தொகுதி மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லாத காரணத்தினால் மாடுகளுக்கும் மீனுக்கும் உணவாக கொடுக்க மட்டுமே பயன்படுகிறது. இதனால் தரமான அரிசியை வெளிச்சந்தைக்கு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்குவதை கடலூர் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் உறுதி செய்து, இந்த பகுதி மக்களுக்கு தரமான மருத்துவம், சுகாதாரம், குடிநீர் தரமான உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும். சிதம்பரம் புவனகிரி காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளை மிகவும் பின் தங்கிய பேரிடர் பகுதியாக தமிழக அரசும் கடலூர் மாவட்ட நிர்வாகமும் அறிவித்து, போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும், உடனடியாக செய்திட வேண்டுமாய், கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறது