சத்தியமங்கலம் அருகே காருக்குள் பதுங்கி இருந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாபகரமாக பிடித்த வனத்துறையினர்,
சத்தியமங்கலம் அடுத்த கோண மூலை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவருக்கு அப்பகுதிகள் ஐந்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாயிகள் நிலத்தில் வாழை ,தென்னை போன்ற விவசாயம் செய்து விவசாய தோட்டத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் வீட்டின் அருகே பழுதான கார் ஒன்று வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்தது இதைக்கண்டு அச்சமடைந்து கூச்சலிட்டனர். அப்போது அந்த சாரைப்பாம்பு வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் புகுந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வன வேட்டை தடுப்பு காவலர்கள் ஆன பாம்பு பிடி வீரர்கள் சூர்யா மற்றும் ராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து காருக்குள் பதுங்கி இருந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாபகரமாக பிடித்து பண்ணாரி வனப் பகுதிக்குள் கொண்டு விட்டனர்.