குள்ளஞ்சாவடியில் 200 கிலோ ஹான்ஸ் பறிமுதல்

டாட்டா சுமோ உட்பட மூன்று இளைஞர்கள் கைது

கடலூர் மாவட்டம்  குள்ளஞ்சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, உலகநாதன், ஆகியோர் தலைமையில் போலீசார் குள்ளஞ்சாவடி அருகே பெருமாள் ஏரிக்கரை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வடலூரில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா சுமோ காரினை வழிமறித்து சோதனை செய்தனர் .அதில் 11 மூட்டையில் ஹான்ஸ் மற்றும் ஐந்து மூட்டையில் கூல், லிப் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் காரில் வந்த இளைஞர்கள் மூன்று நபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் குறிஞ்சிப்பாடி ராமர் மகன் பாலாஜி 33;வடலூர் ஆபத்தானரணபுரம் பூசாலிக்குப்பம் காமராஜ் மகன் மகாராஜன் 27;வடலூர் ஆபத்தானரணபுரம் மாரியம்மன் கோயில் தெரு முருகன் மகன் விக்னேஷ் 21;என்பது தெரிய வந்தது இதனைத்தொடர்ந்து மூன்று இளைஞர்கள் மீது வழக்கு பதிந்து 200 கிலோ 55 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ், மற்றும் கூல் லிப் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா சுமோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர்  கைது செய்து சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial