“குரு மற்றும் சுக்கிரனின் அருளால் உங்கள் வீட்டில் பணமானது குறையாமல் இருக்க வாழ்க்கை மென்மேலும் வளர்ச்சிபெற சமயலறையில் முறையாக இதை மட்டும் செய்தால் கூட போதும்”
“குரு மற்றும் சுக்கிரனின் அருளால் உங்கள் வீட்டில் பணமானது குறையாமல் இருக்க வாழ்க்கை மென்மேலும் வளர்ச்சிபெற சமயலறையில் முறையாக இதை மட்டும் செய்தால் கூட போதும்”
வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் அந்த வீட்டில் வாசம் செய்யும் மகாலட்சுமிக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன பெண்கள் முறையாக பூஜை அறையையும் சமையல் அறையையும் பயன்படுத்தும் பொழுது அந்த வீட்டில் மகாலட்சுமியின் கடாட்சம் பரிபூரணமாக விளங்குகிறது அந்த வகையில் பெண்கள் தங்கள் சமயலறையில் உள்ள அஞ்சறைப்பெட்டியை முறையாக எப்படி பராமரிக்க வேண்டும் அதில் என்னவெல்லாம் இருக்கவேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்
மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் கிடைப்பதற்கு குபேரனின் ஆசி நமக்கு தேவைப்படுகிறது குபேரனின் ஆசியை நாம் பெறுவதற்கு குபேரனின் அம்சமாக கருதப்படும் சில பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும் அவற்றில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியாகும் இந்த அஞ்சறைப் பெட்டியை நாம் முறையாக பயன்படுத்துவதன் மூலம் நம் வீட்டில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை
பொதுவாக நாம் அஞ்சறைப்பெட்டி வாங்க வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது அஞ்சறைப்பெட்டியை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தாலோ அதற்கு உகந்த கிழமையாக கருதப்படுவது வெள்ளிக் கிழமை ஆகும் மேலும் அந்த வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஹோரையில் நாம் தொடங்கும் பொழுது அது மேலும் சிறப்புக்குரியதாக இருக்கும்
அஞ்சறை பெட்டியை வாங்கி வந்து அதன் அடியில் மஞ்சள் நிற துணியை விரிக்க வேண்டும் மஞ்சள் நிறம் குருபகவானின் அம்சமாக கருதப்படுவதால் குருவும் சுக்கிரனும் இணைந்து நமக்கு பல நன்மைகளை தருவார்கள் அந்த மஞ்சள் துணியின் மேல் மருதாணி தண்டையோ அல்லது மாதுளை தண்டையோ ஒரு விரல் அளவிற்கு வைக்க வேண்டும்
மருதாணியும் மாதுளையும் மகாலட்சுமியின் அம்சம் என்பதால்தான் அதை வைக்க வேண்டும் பிறகு அந்த அஞ்சறைப் பெட்டியில் ஐந்து அல்லது ஏழு அறைகள் இருக்கும் அவற்றில் முக்கியமாக இடம் பெற வேண்டிய ஐந்து பொருட்களை பற்றி நாம் பார்ப்போம் முதலாவதாக வெந்தயம் கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும் இரண்டாவது சோம்பு மூன்றாவது கிராம்பு நான்காவது வெள்ளை மொச்சையையும் தாமரை விதையையும் கலந்து வைத்திருக்க வேண்டும் ஐந்தாவது மருதாணி விதை இருக்க வேண்டும் இவற்றில் ஏலக்காயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
இதில் நாம் வெள்ளை மொச்சை தாமரை விதை மருதாணி விதை, ஏலக்காய் இவற்றை ஒன்றாக கலந்து ஒரே அறையிலும் வைக்கலாம் இதில் இருக்கும் அறைகளை நாம் காலியாக வைக்க கூடாது இதில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் நிறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதில் நாம் பணத்தை வைக்கலாம் அல்லது தங்க நாணயம் வெள்ளி நாணயம் போன்றவற்றையும் வைக்கலாம்,
நாம் தினமும் வரவு செலவு செய்வதற்குரிய தொகையை இந்த அஞ்சறைப் பெட்டியில் வைத்து எடுத்து செலவு செய்வதன் மூலம் நம்முடைய பண வரவு அதிகரிக்கும் நிரந்தரமாக லட்சுமி வாசம் செய்வாள் பொதுவாக தலைவாசல் குங்குமம் கணவரின் பாதம் துளசி மாடம் அடுப்பு அஞ்சறைப்பெட்டி இவை அனைத்திலும் சுக்கிரன் வாசம் செய்கிறார்,
இந்த பொருட்களை ஒரு பெண் சுத்தமாக இருந்து தொடும்பொழுது சுக்கிரனின் முழு ஈர்ப்பு விதியையும் பெறுகிறாள் அவ்வாறு சுக்கிரனின் ஈர்ப்பை பெறுவதால் வீட்டில் மகிழ்ச்சி நிலவுகிறது ஒரு வீடு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி தானாக குடியேறுவாள் இந்த அஞ்சறைப் பெட்டியை இவ்வாறு வைப்பதன் மூலம் நம்முடைய மகிழ்ச்சியும் நம் பண ஈர்ப்பும் இரட்டிப்பாவதில் எந்தவித ஐயமும் இல்லை நமது முன்னோர்கள் இந்த முறையில் தான் பயன் படுத்தினார்கள் ஆனால் காலப்போக்கில் பேஷன் என்ற முறையில் மாற்றிவிட்டனர் மேற்சொன்ன முறையில் பயன்படுத்தி முன்னேற்றம் காணலாம்,