குடியரசு தினத்தை முன்னிட்டு செட்டநாயக்கன்பட்டி முதல்நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி முதல்நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா தர்மராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அர்ச்சுனன் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் நஜாருதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.