வடலூர் அருகே வள்ளலார் சித்திப்
பெற்ற திரு அறை தரிசனம் , பல
ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்.
கடலூர், மாவட்டம்
வடலூர் ஞான சபையில் மாதம் தோறும் பூச நட்
சத்திரத்தன்று ஆறுதிரை நீக்கிய
ஜோதிதரிசனமும்,ஆண்டுதோறும்
(ஜனவரி)தைமாதம்,தைப்பூச ஜோதி தரிசனமும் நடைபெறுவது
வழக்கம்,
இந்த ஆண்டு பிப்ரவரி 5ந் தேதி வடலூர் ஞான சபையில்தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது,
இதில் உலகெங்கும் வாழும் தமிழர்கள், மற்றும்
தமிழகத்தின்பல பகுதியில்
இருந்து லட்சக்கணக்கான பக்தர்
கள், கலந்துக் கொண்டு ஜோதி
தரிசனம் பார்த்தனர் ,
இதனைத் தொடர்ந்து மேட்டுக்
குப்பத்தில், வள்ளலார் சித்திப்
பெற்ற திருஅறைதரிசனம் தரி
சனம் நடைபெருவது வழக்கம்
இங்கு உள்ள ஒரு அறையின் உள்
பக்கம் சென்ற வள்ளலார்.
அறையின் உள்புறம் தாழ்ப்பாள்
போட்டுக் கொண்டு சித்திப்பெற்
றார் , அந்த அறையின் வெளிப்
புறக்கதவை திறந்து தீப வழிபாடு
செய்து பக்தர்கள் பார்வைக்கு
ஏற்பாடு செய்வதே திருஅறை
தரிசனம் ஆகும்,
அதன்படி நேற்று மேட்டுக்குப்பத்
தில் திருஅறை தரிசனம் நடை
பெற்றது, முன்னதாக, வள்ளலாரின் உருவப்படம் மற்றும் வள்ளலார்பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய ( பேழை)பெட்டியைபூக்களால்
அலங்கரிக்கப்பட்டு,
காலை 6 மணிக்கு அலங்கரிக்
கப்பட்ட அந்தப் பெட்டியை பல்லக்
கில் வைத்து மேளதாளம் முழங்க
வடலூர் ஞானசபையில் இருந்து
மேட்டுக்குப்பத்தில் உள்ள திரு
மாளிகைக்கு ஊர்வலமாக எடுத்
துச்செல்லப் பட்டது.
பல்லக்கைகருங்குழியைசேர்ந்த
மீனவர் சமுகத்தினர்கள் தங்கள்
தோளில் சுமர்ந்து சென்றனர், செங்கால் ஓடையில் நைனார்குப்
பம், கிராமத்தினர்களும்.
கருங்குழியில் வள்ளலார் வழிப்
வட்டபிள்ளையார் கோயில் ‘தண்
ணீரால் விளக்கு எரித்த கருங்குழி
ரெட்டியார் இல்லம், வள்ளலார் வழிபாடு செய்த பெருமாள் கோயில், தீஞ்சுவை நீரோடை வழியாக பல்லக்கு ஊர்வலம் சென்றது , தீஞ்சுவை ஒடை
யில் கருங்குழி செம்புலிங்கம் குடு
ம்பத்தினர்கள் சீர்வரிசையுடன்
வரவேற்று வழிபட்டனர், பகல்
12மணிக்கு மேட்டுக்குப்பம்
திருமாளிகையினை ஊர்வலம்
வந்தடைந்தது,அப்பொழுதுகிராம
மக்கள் பழம் சீர் வரிசை பொருட்
களுடன் வரவேற்று வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருஅறை
தரிசனம் தொடங்கியது, சித்தி வளாக திருமாளிகையில் வள்ள
லார் சித்திப்பெற்றதிருஅறையில்
ஞானசபை பூசகர் தீபம்காண்
பிக்க. திருஅறைதரிசனம் தொடங்
கியது, அப்பொழுது திரு அறை
முன்பு திரண்டு இருந்தபலஆயிரக்
கணக்கானபக்தர்கள்அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்ஜோதி ,
தனிப் பெருங்கருணை, அருட்
பெருஞ் ஜோதி என்கிற மகாமந்
திரத்தை உச்சரித்தனர்.
இதனையடுத்து பக்தர்கள் ஒரு
வர் பின் ஒருவராக வரிசையில்
சென்று திருஅறையை தரிசனம்
செய்தனர், மாலை 5 மணி வரை
திரு அறை தரிசனம் நடைபெற்
றது,
விழாவையொட்டி சன்மார்க்க
சங்கத்தினர்கள், திரு அருட்பா
சொற்பொழிவுகள், இசை நாடக
நிகழ்ச்சிகளுடன், பல இடங்களில்
அன்னதானமும் வழங்கப்பட்டன.
பக்தர்கள் வசதிக்காக சிறப்பு
பேருந்துகள் இயக்கப்பட்டன.வட
லூர் போலிசார் (300 க்கு மேற்பட்டவர்கள்) ஏராளமானவர்
கள் பாதுகாப்பு பணியில் ஈடு
பட்டனர் ,
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வள்ள
லார் தெய்வநிலையமும், கிராம
பொதுமக்களும் செய்து இருந்
தனர்.